உதவிகள் ...

ஏழைச் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை மேம்படுத்த செய்யப்படும் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மற்றும் நிதி உதவிகள்.

தெருமுனை பிரச்சாரங்கள் ...

மார்க்கம் மற்றும் சமுதாயம் பற்றி மக்கிளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த செய்யப்படும் தெருமுனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்.

ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் ...

ஏழை முஸ்லிம்களும் மகிழ்வுடன் நோன்பு பெருநாளை கொண்டாட பித்ராவை நபிவழிப்படி கூட்டாக வசூலித்து ஏழை மக்களை தேடிச் சென்று விநியோகித்தல்.

நல்லொழுக்க பயிற்சி முகாம்கள் ...

மார்க்கம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றை விளங்கி செயல்படுத்திட நல்லொழுக்க பயிற்சி முகாம்கள்.

பெருநாள் தொழுகைகள் ...

TNTJ ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக நடைபெற்ற ஈகை மற்றும் நோன்புப் பெருநாள் தொழுகைகள்.

Showing posts with label தெருமுனை பிரச்சாரம். Show all posts
Showing posts with label தெருமுனை பிரச்சாரம். Show all posts

Saturday, July 7, 2012

தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 07-07-2012 சனிக்கிழமையன்று ஆவணியாபுரம் காயிதே மில்லத் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் உபைதுல்லா மன்பஈ அவர்கள் நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் !!



Sunday, June 10, 2012

தெருமுனை பிரசாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் ஆடுதுறை கிளையின் சார்பாக சென்ற 10-06-2012 ஞாயிற்றுக்கிழமையன்று வாழைகொல்லை தெருவில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


Sunday, December 4, 2011

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையில் 04.12.11 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.


இதில் சகோ:முஹம்மது அலி அவர்கள் சமுதாய சீரழிவுகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
 

Thursday, March 24, 2011

ஆடுதுறை செட்டித் தெருவில் தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளின் தொடர்ச்சியாக, 23.03.2011 புதனன்று மாலை 7 மணி அளவில், ஆடுதுறை செட்டித் தெருவில் (தெற்கு சேணிய முஸ்லிம் தெரு) தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

குர்ஆன் - ஹதீஸ் ஒளியில், ரியாத் மண்டலச் செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், "இறையச்சம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ஆண்கள் - பெண்கள் உட்பட 50 பேர்களுக்கு மேல் இந்த மார்க்க விளக்க அமர்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இது அல்லாமல், பெண்கள் தங்கள் வீடுகளின் வாசல்களில் இருந்து கொண்டு பயானை கேட்டு பயன் பெற்றனர். அருகில் இருந்த தெருக்களுக்கும் ஸ்பீக்கர் வசதி செய்யப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் இறுதியில் கிளைச் செயலாளர் சகோ. வரிசை நன்றி உரை ஆற்றினார். கிளைத் தலைவர் சகோ. சாதிக், கிளை பொருளாளர் சகோ. ஜெஹபர் அலி ஆகியோர் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Monday, February 14, 2011

மவ்லிதை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளையில் மவ்லித் மாதமான(?) ரபியுல் அவ்வல் மாதத்தில் மவ்லித்களையும் மீலாது விழாக்களையும் எதிர்க்கும் முகமாக, விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த 13.02.2011 ஞாயிறன்று இரவு மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் “இஸ்லாத்தின் அடிப்படை” என்ற தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்.

அதனை அடுத்து, மாவட்ட துணைச் செயலாளர் சகோ. மன்சூர் அலி அவர்கள் “மவ்லிதும் இணைவைப்பும்” என்ற தலைப்பில் குர்ஆன் – ஹதீஸ் ஒளியில் சிறப்புரை ஆற்றினார்.


அதிக அளவில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர். மேலும், பலர் வீடுகளிலிருந்து பிரச்சாரத்தை கேட்டு பயன் பெற்றனர்.

கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Friday, January 21, 2011

ஜப்பான் காலனியில் ஜனவரி 27 தெருமுனை பிரச்சாரம் !!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளையில் ஜனவரி 27 பேரணி & ஆர்ப்பாட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த 21.01.2011 வெள்ளியன்று இரவு மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, ஜப்பான் காலனியில் சிறப்பாக நடைபெற்றது.

ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். "ஜனவரி 27 சென்னை-மதுரை ஆர்பாட்டம் - பேரணி ஏன்?" என்ற தலைப்பில் புள்ளி விபரங்களோடு அவர் விளக்கினார். 

நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் சகோ. மன்சூர் அவர்கள் ஜன27க்கான கிளையின் ஆயத்த பணிகளை விளக்கியபின், கூட்டம் இனிதே துஆவுடன் நிறைவுற்றது.

பெண்கள், காவல்துறை - உளவுத் துறை அன்பர்கள் உட்பட, சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.




Thursday, January 13, 2011

ஆவணியாபுரம் புதுத் தெருவில் நடைப்பெற்ற தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆவணியாபுரம் - ஆடுதுறை கிளையின் சார்பாக கடந்த 9/1/2011 ஞாயிற்றுக்கிழமையன்று ஆவணியாபுரத்தை சேர்ந்த புதுத் தெருவில் ஜனவரி 27  விழிப்புணர்வு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் நுஃமான் அவர்கள் ஜனவரி 27 பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஏன் ? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.